என்று தணியும் இந்தத் தண்ணீர்ப் பகை?

By காமதேனு

மானா பாஸ்கரன்
baskaran.m@hindutamil.co.in

‘குயவனின் வீட்டிலும் பிளாஸ்டிக் குடம்’ என்கிற கவிதையை எளிதாகக் கடந்துபோன சென்னைவாசிகளுக்கு இது சோதனைக் காலம்.

தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர்ப் பஞ்சம். குறிப்பாகத் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே இருக்கிறது. யார் யாரைச் சந்தித்தாலும், சந்திப்பின் தொடக்கம், “உங்கள் பகுதியில் தண்ணீர்ப் பிரச்சினை எப்படியிருக்கிறது?” என்பதாகத்தான் இருக்கிறது. குடும்பத்தில் ஆண்களை விட பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மணிக்கணக்காகத் தண்ணீர் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள் நம் பெண்கள்.

தனது மனைவி நாள் முழுதும் தண்ணீர் பற்றி தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்ப தாகவும், கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லிக் கண் கலங்கினார் நண்பர் ஒருவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE