வறுமைக்கே வாழ்க்கைப்பட்டோம்..!- - மாற்றுத்திறனாளி குடும்பத்தின் கண்ணீர்க் கதை

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

‘ஆவீன மழை பொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோவ, அடிமை சாக’ என்று தொடங்கும் விவேக சிந்தாமணி பாடலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடுக்கடுக்கான சோதனைகளால் துவண்டு நிற்கும் குடும்பத் தலைவனின் துயர் மிகு சூழலைச் சொல்லும் பாடல் அது. அந்தப் பாடலின் வரிகளைப் போல அடுத்தடுத்து துயரங்களை அனுபவித்து வருகிறது முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட முரளி அய்யங்காரின் குடும்பம். சொற்ப அளவில் கிடைத்துவந்த அரசு உதவித்தொகையையும் எடுக்க முடியாமல் ஐஓபி வங்கி தடைபோட்ட தகவல் வெளியான பிறகுதான் இந்தக் குடும்பத்தின் பரிதாப நிலை வெளியுலகத்துக்குத் தெரிகிறது.

மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள திருமணஞ்சேரி யில்தான் முரளியின் குடும்பம் வசிக்கிறது. ஆம், திருமணமாகாதவர்கள் சென்று வழிபட்டால் திருமணம் ஆகிவிடும் என்ற நம்பிக்கையும், புராணப் பெருமை யும் கொண்ட அதே திருமணஞ்சேரியில்தான். ஆனால், முரளி குடும்பத்தாரில் பெரும்பாலானோருக்குத் திருமண பாக்கியமே இல்லை என்பதும் நடந்த ஒரே திருமணமும் சோகத்தில் முடிந்தது என்பதும் கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கலங்க வைத்து விடும் சோகம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE