குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
“சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம்” என திடீரென திமுக பின் வாங்கியதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டது ஆளும் கட்சி. ஆனால், அப்படிச் சொல்லி ஆளும்கட்சியை திசைதிருப்பிவிட்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகளை அரவம்காட்டாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது திமுக.
திமுகவின் உள்வட்டத்தை அறிந்த அரசியல் புள்ளி ஒருவர் இந்தத் தகவலை என்னிடம் சொன்ன போது எனக்கே அலுத்துப் போனது. அவரிடம், “இதோ... அதோ என்று இன்னும் எத்தனை நாளைக்குத்தான் திமுக இப்படி பூச்சாண்டி காட்டப் போகிறது. உண்மையில் அங்கே என்னதான் நடக்கிறது... ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று சொல்லிச் சொல்லியே வேறு எதற்காவது டிராமா போடுகிறார்களா?” என்று கேட்டேன்.
பின் வாங்கியது ஏன்?