கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
ஒருவரின் பசிக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்பார்கள். அப்படித்தான் ஏழைப் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்தைச் செலுத்தி உதவுவதைவிட, அவர்களே அதற்கான நிதியாதாரத்தை உருவாக்கிக் கொள்ளும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார் கரூர் கல்வியாளர் கே.செங்குட்டுவன்.
கரூர் - மதுரை சாலையில் உள்ள வள்ளுவர் டிரஸ்ட் அறிவியல் மேலாண்மைக் கல்லூரியின் சேர்மனான செங்குட்டுவனை அவரது கல்லூரியில் சந்தித்தேன்.
எப்படி வந்தது இந்தச் சிந்தனை என்று கேட்டால், “வள்ளுவர் டிரஸ்ட் மூலம் எங்க காலேஜை 2004-ல் ஆரம்பிச்சோம். எங்க காலேஜ்ல சேர்ந்த பல ஸ்டூடண்ட்ஸ் ஃபர்ஸ்ட் இயர் முடிஞ்ச கையோட படிப்பைத் தொடரலைங்கிற விஷயம் எங்களுக்கு ஷாக்கா இருந்துச்சு. விசாரிச்சா, ஃபீஸ் கட்ட முடியலைன்னு சொன்னாங்க. பெரும்பாலும் விவசாயக் கூலிகள். சாப்பாட்டுக்கே கஷ்டம். படிப்புக்கு என்ன பண்ணுவாங்க? கேட்கவே மனசு தாங்கலை. ஏதாவது செஞ்சாகணும்னு முடிவு பண்ணினேன். அதுல உதிச்சது தான் இந்த ப்ளான்” என்கிறார்.