பாத்திரப் பட்டறைக்குள் ஓர் பாவலர்-  பாரதிமோகனின் படைப்புலகம்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

கோயில்களுக்கு மட்டுமல்ல, உலோக வேலைகளுக்கும் புகழ்பெற்ற நகரம் கும்பகோணம். உலோகப் பாத்திரங்கள் தொடங்கி ஐம்பொன் சிலைகள் வரை உற்பத்தி செய்யும் பட்டறைகளில் எப்போதும் இங்கே உளிச் சத்தம் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அப்படியொரு உலைக்களத்தில் ஒரு கையில் பாத்திரமும் மறுகையில் பேனாவுமாக இயங்கிக்கொண்டிருக்கும் கோ.பாரதிமோகன், இலக்கிய வட்டத்துக்குப் பரிச்சயமான கவிஞர். இவரது படைப்புகள் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன என்பது மேலும் சிறப்பு. கலைநயம் மிக்க கவிஞரைச் சந்திக்கக் குடந்தைக்குச் சென்றிருந்தேன்.

குடந்தையின் தாராசுரம் அருகே வளையப்பேட்டை. அங்குள்ள அந்தத் தகரப் பந்தலில் வெப்பத்தைத் தணிக்க இரண்டு காற்றாடிகள் இடைவிடாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றன. மண் தரையில் கோணிச் சாக்குகள் விரிப்பு. பித்தளைத் தகடுகளை வெட்டவும் வளைக்கவும் பற்றவைப்பதுமான வேலைகளில் மும்முரமாய் இருக்கிறார் பாரதிமோகன். அருகே மலையாய் குவிந்து கிடக்கின்றன குடங்கள். இத்தனைக்கும் நடுவில், ஓஷோவின் ‘அன்பின் அதிர்வுகள்’ என்ற புத்தகம் பாதி படித்த நிலையில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கிறது.

“வணக்கம் கவிஞரே!” என்றதும் திரும்பிப் புன்னகைக்கும் பாரதிமோகன், அதே புன்னகையுடன் தன்னைப்பற்றி பேசத் தொடங்குகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE