சம்பிரதாயச் சடங்கு வேண்டாம்!

By காமதேனு

நா  வறண்டு தவிக்கிறது தமிழகம். தலைநகர் சென்னை தொடங்கி, தமிழகத்தின் மூலைமுடுக்குகள் வரை காலி குடங்களுடன் பரிதவித்து நிற்கிறார்கள் மக்கள்.

ஊருணி, ஆற்றுப்படுகைகளில் சொட்டுச் சொட்டாகக் கிடைக்கும் தண்ணீரை உயிரைப் பணயம் வைத்துப் பிடித்துச் செல்கிறார்கள் பெண்கள். சம்பா, குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் இல்லாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். தீயணைப்பு வண்டிகளுக்கே தண்ணீர் இல்லாமல் திண்டாடு கிறார்கள். இந்த ஆண்டும் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தமிழகம் தப்பவில்லை என்பதைத்தான் இந்தக் காட்சிகள் சொல்கின்றன.

கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதன் விளைவை இந்த ஆண்டு தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. மறுபுறம், காவிரியிலிருந்து நமக்கான தண்ணீரைத் திறந்துவிட மறுக்கிறது கர்நாடகம். இவற்றைத் தாண்டி, குடிநீர், பாசனம், தொழில் துறை உள்ளிட்ட தேவைகளுக்காக நிலத்தடி நீர் அதீதமாக உறிஞ்சப்படுகிறது.

வறட்சியால் விளைச்சல் குறைந்து போனதால் அரிசி, பருப்பு போன்ற அத்தியா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE