பென்ஷன் தான் இப்ப சோறு போடுது!- பண்ணைவீட்டுப் படைப்பாளி பழனிசாமி

By காமதேனு

கா.சு.வேலாயுதன்

டிராக்டர் ஷெட்டில் பழைய டயர்கள் கிடக்கும்.அங்கங்கே ஆயில் ஊத்திக் கிடக்கும். ஆனால், மு.பழனிசாமியின் டிராக்டர் ஷெட்டில் திரும்பிய பக்கமெல்லாம் புத்தகங்களாய் கிடக்கிறது. அத்தனையையும் எழுதியது பழனிசாமியே என்பது கூடுதல் சுவாரசியம்!

கை வச்ச பனியன், இடுப்பில் நாலு முழ வேட்டி, தோளில் ஒரு துண்டு. இப்படித் தோற்றமளிக்கும் மு.பழனிசாமியைப் பார்த்த யாரும் அவர் ஒரு எழுத்தாளர் என்று நம்பக்கூட மாட்டார்கள். வயது எண்பதைக் கடந்துவிட்ட இவர் ஒரு முன்னாள் தலைமை ஆசிரியர். இதுவரைக்கும் 10 நாவல்கள், நான்கு உரைநடை நூல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, நாற்பதுக்கும் மேற்பட்ட வேளாண் நூல்கள் இத்தனையும் சமைத்துவிட்டு சாமானியர் கணக்காய் உட்கார்ந்திருக்கிறார்.

அவிநாசி அருகே உள்ளது பழங்கரை. இங்கே தேவம்பாளையம் பழைய மணியக்காரர் தோட்டம். பழனிசாமியின் தாத்தா, அப்பா இவர்கள் எல்லாம் கிராமத்து மணியக்காரர்களாக இருந்தவர்கள். இந்தத் தகவல்களை எல்லாம் விசாரித்துக் கொண்டு மணியக்காரர் தோட்டத்தில் மு.பழனிசாமியைச் சந்தித்தேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE