என்.சுவாமிநாதன்
ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு, மருந்தில்லா வாழ்வு, சூழலியல் கல்வி - இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், நடைமுறைக்கு இதெல்லாம் சாத்தியமா? சாத்தியமே என நிரூபித்து வருகிறார் அமீனா மணிக்கா. இவர் மட்டுமல்ல... இவரது குடும்பமே அப்படித்தான் வாழ்கிறது!
நெல்லை மாவட்டம், வள்ளியூருக்கு அருகிலுள்ள அற்புதர் நகரில் இருக்கிறது அமீனா மணிக்காவின் வீடு. இவர் இயற்கை விஞ்ஞானி அலீ மனிக்ஃபானின் நான்காவது மகள்.
மண்டபத்தில் உள்ள மத்திய அரசின் கடல்சார் மீன்வள ஆய்வுக் கழகத்தில் உதவியாளராகப் பணியாற்றிய அலீ மனிக்ஃபான், தனது இயற்கை ஆய்வுகளுக்காக அந்தப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். லட்சத்தீவிலுள்ள மினிக்காய் இவர்களது பூர்வீகம்.