இது மோகன்லால் ஆட்டோ... அதிசயிக்க வைக்கும் அருண்குமார்!

By காமதேனு

என்.சுவாமிநாதன்

ஏற்றமும் இறக்கமும் நிறைந்த மலைச் சாலையில் அழகாய் ஊர்ந்துவருகிறது அந்த ஆட்டோ. முழங்கால் அளவுக்கே உயரமுள்ள அந்த ஆட்டோவை ஓட்டுவது ஒரு குட்டிப் பையன். பின்சீட்டில் அமர்ந்திருக்கும் அவனது தங்கை உற்சாகமாய் கைத்தட்டுகிறாள். தன் குழந்தைகளுக்காக இப்படி ஒரு ஆட்டோவைத் தானே உருவாக்கிக் கொடுத்துள்ளார் ஒரு தந்தை.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழாவைச் சேர்ந்தவர் அருண்குமார் புருஷோத்தமன். அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக இருக்கும் இவர், இப்போது குடும்பத்துடன் கட்டப்பனாவில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசிக்கிறார். அருண்குமாருக்கு புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் சிறுவயதிலிருந்தே அலாதி ஆர்வம். ஆனால், பொருளாதாரச் சூழல் அவருக்கு அப்போது அதைச் சாத்தியமாக்கவில்லை. அதனால் இப்போது தனது குழந்தைகளுக்காக, தானே ஏதாவது புதுப்புது கண்டுபிடிப்புகளை வடிவமைத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

“சிறு வயது கனவுகள் எல்லாம் இப்போது சாத்தியமாகிறதா?” என்ற கேள்வியோடு அருண்குமார் புருஷோத்தமனைச் சந்தித்தேன். “நான் ரொம்ப ஏழ்மை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE