அது மட்டும் பிறப்பின் அர்த்தம் இல்லையே!- மாடி அறையில் ஓர் ஏழை எழுத்தாளன்

By காமதேனு

என்.பாரதி

மொட்டை மாடியில் இருக்கும் அந்த அறையின் சுவர்களுக்கு சிமென்ட் பூச்சுக்கூட இல்லை. வெயில், மழை விழாமல் இருக்க மேல் கூரையை தகர ஷீட் மறைத்திருக்கிறது. ஓடாத மேசை மின்விசிறி ஒன்று ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கிறது. இப்படியான சூழலுக்குள் இருந்து பகுதி நேர இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கிறார் கிருஷ்ணகோபால்!

எழுத்துலகுக்காகத் தனது பெயரை கிருஷ்ணகோபால் என மாற்றிக் கொண்ட கோபாலகிருஷ்ணனின் வீடு நாகர்கோவிலை அடுத்த குஞ்சன் விளையில் இருக்கிறது. ஐடிஐ படித்துவிட்டு சினிமா துறையில் சாதிக்கலாம் எனப் புறப்பட்ட இவரை எழுத்தாளர் ஆக்கியது காலம் செய்த தீர்மானம்.

“ஸ்கூல்ல படிக்கிறப்பவே நிறைய கவிதைகள் எழுதுவேன். ஒரு உண்மைய சொல்லணும்னா, பருவ வயசுல நான் படிச்ச பாலியல் சம்பந்தமான புத்தகங்கள்தான் எனக்குள்ள வாசிப்பு பழக்கத்த விதைச்சுட்டுப் போச்சு. ஐடிஐ முடிச்சுட்டு சென்னைக்குப் போய் சினிமா வாய்ப்புகளுக்காக அலைஞ்சேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE