அமமுகவில் தினகரன்... அதிமுகவில் சசிகலா..?- திருப்புமுனைக்குக் காத்திருக்கும் மே 23!

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்
முடிவுகளை எடுத்துவிட்டு சசிகலாவை அதற்கு உடன்பட வைப்பதில் தினகரனை மகா கெட்டிக்காரர் என்பார்கள். சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்டதன் மூலம் அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்!

ஜெயலலிதா இறந்து சசிகலா ஜெயிலுக்குப் போன சமயம் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல். அப்போது அமமுக உதிக்கவில்லை. அப்போது யாரை ஆளும் கட்சிக்கு வேட்பாளராக நிறுத்தலாம் என்று சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் சிறையில் அவரிடம் ஆலோசனை நடத்தினார்கள். “தமிழகத்தில் அதிமுக அல்லது திமுகதான் அதிகாரத்துக்கு வர முடியும். மற்ற யாரும் யாரையும் அதிகாரம் செய்ய முடியாது என்பதை பாஜகவுக்குப் புரியவைக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் விசுவாசிகள் யாரையாவது நாம் நிறுத்தினால் நல்லது” என்று சொன்ன சசிகலா, “இருந்தாலும் இந்தத் தேர்தலில் திமுக தான் ஜெயிக்க வேண்டும். அதிமுக தோற்றால் தான் மக்களுக்கு நம் மீதுள்ள ஒட்டுமொத்தக் கோபமும் தீரும்” என்று சொன்னார். ஆனால் அதற்கு மறுநாளே, “சின்னம்மா உத்தரவிட்டால் நானே ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்” என்று சென்னையில் பேட்டியளித்தார் தினகரன். அவர் இப்படிச் சொன்ன பிறகு வேறு யார் போட்டிக்கு வருவார்கள்?

தினகரனின் இந்தத் தன்னிச்சை பிரகடனத்தைக் கேள்விப்பட்டு கடும் கோபத்தில் இருந்தார் சசிகலா. அவரைச் சமாதானப்படுத்த பெங்களூரு சிறைக்குச் சென்ற தினகரன், இப்படிச் சொல்லி சமாதானப்படுத்தினார்.

“நாம் ஆளும் கட்சியாக இருக்கிறோம். ஆனால், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் நம் கட்சிக்காரர்களுக்கே இருக்கிறது. போட்டியிடவே பலரும் தயங்குகிறார்கள். நல்லதோ கெட்டதோ உனக்காக நானே நிற்கிறேன் சசி (சித்தியை இப்படித்தான் பாசத்துடன் அழைப்பார் தினகரன்). நின்னு மரியாதையான ஓட்டு வாங்கிக் காட்டுறேன்” என்று சொன்னார் தினகரன். அவர் இப்படிச் சொன்னதும் கோபம் மறந்து குணமானார் சசிகலா. இப்படியொரு இக்கட்டானசூழலில் கட்சி தோற்கும் என்று தெரிந்தும் தேர்தலில் நிற்பதாகச் சொல்கிறாரே என்று பரிவு வேறு கூடிப்போனது தினகரன் மீது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE