ரஜினி ‘தர்பார்’

By காமதேனு

அனல் பறக்கும் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் ரஜினியின் ‘தர்பார்’ பட அறிவிப்பு அத்தனை வைரல்களையும் துவம்சம் செய்துவிட்டது. ரஜினிக்கு இது 167 - வது படம் என்றாலும், வரவேற்பு எப்போதும் போல் அமோகம்தான். ‘தர்பார்’ தலைப்பும் சரி, டீசர் போஸ்டரும் சரி, ரஜினியின் மாஸுக்குக் கொஞ்சமும் குறைவில்லை. ஆனால், தனது படம் குறித்து ஏதாவது செய்தி வெளியாகும்போது மட்டுமே ரஜினி மைக்கைப் பிடித்து கருத்து பேசுவது என்ன ரகம் என்றுதான் தெரியவில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள். நதிநீர் இணைப்பு குறித்து பாஜகவுக்கு ஆதரவாகப் பேசியதும், கமலுக்கு ஆதரவில்லை என்று அவர் சொன்னதும் விமர்சனம் ப்ளஸ் வைரலானது. அரசியல் ஆட்டத்தில் ரஜினிக்கு கமல் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறதே என்கின்றனர் மீம் கிரியேட்டர்கள். ரஜினி  ரசிகர்களோ,  “நீங்கள் அரசியலுக்கே வர வேண்டாம், படம் கூட நடிக்க வேண்டாம், ‘தர்பார்’ மாதிரி போஸ்டர்களையாவது அடிக்கடி வெளியிடுங்கள். போதும்’’ என்கிறார்களாம்.

ஸ்டாலினால் `ஆக'ன்னு சொல்லாமல் ஒரு நிமிடம் பேச முடியுமா? - சீமான்

உங்களால பொய் சொல்லாமல் ஒரு நிமிடம் பேச முடியுமா? - கிப்சன்

கார்ப்பரேட் மோடி ஆட்சியில் இருந்து விடுபட  தயாநிதி மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர். கம்யூனிஸ்ட் டி.ராஜா மத்திய சென்னையில் பிரச்சாரம். - செய்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE