தேர்தலை நிறுத்தத்தான் போட்டி போடுறேன்! - பொதுநலப் புலி கே.கே.ரமேஷ் தடாலடி

By காமதேனு

கே.கே.மகேஷ்

“சாமி சரணம்... அடுத்த மாசம் மதுரை மேலமாசி வீதியில மண்டல பூஜை இருக்குது. நீங்க அவசியம் வரணும்” என்பது மாதிரியான டெலிபோன் அழைப்புகள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு அடிக்கடி வருமாம். “சாமி, அந்த பாடகர் வீரமணி வேற, நான் வேற” என்று பதில் சொல்லியே அலுத்துப் போனார் கி.வீரமணி. அதேபோலத்தான், “மகேஷ், கலக்கிட்டீங்க போங்க. எப்படி பத்திரிகையில வேலை பாத்துக்கிட்டே இவ்ளோ பொதுநல வழக்குப் போடுறீங்க?” என்று எனக்கும் யாராவது போன் போடுவார்கள். “அண்ணே, அவர் பேரு கே.கே.ரமேஷ்” என்று பதில் சொல்லியே ஓய்ந்து போனவன் நான்.

அப்போதே, இவரை ஒரு பேட்டி எடுக்கலாமே என்று போனில் பேசியிருக்கிறேன். “எங்கிருக்கிறீர்கள்?” என்று கேட்டதுதான் தாமதம், என் நம்பரைப் பார்த்தாலே தெறிக்க ஆரம்பித்துவிட்டார். கூச்ச சுபாவமுள்ள ஆள் போல என்று விட்டுவிட்டேன்.

மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயரும் இருக்க, “என்னண்ணே தேர்தல்ல போட்டியிடுறீங்க போல. உங்களைச் சந்திக்கணும். எப்ப, எங்க வரட்டும்?”என்று மறுபடியும் போன் போட்டேன். பயந்து பயந்து பேசியவர், என் நம்பரையே பிளாக் பண்ணிவிட்டார். 5 நாட்களாக அலைக்கழித்தவரிடம், “அம்மா சத்தியமா நான் ரிப்போர்ட்டர்தான்யா” என்று சொல்லியும் ஆள் எஸ்கேப். கோர்ட்டிலேயே அவரைப் பிடிப்பது என்று தடாலடியாக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கே போய்விட்டேன். அங்கேயும், “கண்டிப்பா வந்திடுறேன், எந்த கேட்ல இருக்கீங்க?” என்று கேட்டவர் தெளிவாக வேறு கேட் வழியாக ‘எஸ்’ ஆகிவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE