தென் சென்னையை வெல்வது அழகான வேட்பாளரா... அமைச்சரின் மகனா..?

By காமதேனு

கரு.முத்து

சுமார் 20 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தென் சென்னை, படித்தவர்களை அதிகம் கொண்ட தொகுதி. இங்கே இந்த முறை 34 ஆண்கள், 5 பெண்கள் உள்பட மொத்தம் 40 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

திமுக ஏழு முறை தொகுதியைக் கையகப்படுத்தி இருந்தாலும், கடந்த இரண்டு தேர்தல்களாக இந்தத் தொகுதி அதிமுகவின் கைகளில் தவழ்கிறது. கடந்த தேர்தலில், திமுக, அதிமுகவுக்கு மத்தியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கும் சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் விழுந்திருப்பதால், இங்கே பாஜகவும் வலுவான நிலையில் இருப்பதை உணர முடிகிறது.

நாஞ்சில் மனோகரன், அறிஞர் அண்ணா, முரசொலி மாறன், ஆர்.வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட ஜாம்பவான்களை டெல்லிக்கு அனுப்பிய தொகுதி இது. இந்த முறை இல.கணேசனுக்காக இந்தத் தொகுதியைக் கேட்டு போராடியது பாஜக. ஆனால், கூட்டணி பலம் கூடியதால் தொகுதியைத் தர மறுத்த அமைச்சர் ஜெயக்குமார், மீண்டும் இங்கே தனது மகன் ஜெயவர்தனையே களமிறக்கியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE