பொல்லாத வீடியோ- வேதனையில் துடிக்கும் பொள்ளாச்சி கிராமங்கள்!

By காமதேனு

கா.சு.வேலாயுதன்

பொள்ளாச்சியில், பெண்களைச் சீரழித்து வீடியோ எடுத்த கயவர்களான திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சிகளும் கல்லூரி மாணவர்களும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.

கோவை மண்டல கிராமங்கள் கட்டுப்பெட்டியானவை. அதிலும் பொள்ளாச்சி கிராமங்கள் ஊத்துக்குளி ஜமீன், சமத்தூர் ஜமீன், புரவிபாளையம் ஜமீன், சிங்காநல்லூர் ஜமீன், வேட்டைக்காரன் புதூர் ஜமீன் என ஜமீன்கள் சூழ இருப்பவை. இங்கெல்லாம் சின்னத் திருட்டு நடந்தாலே அந்தக் காலத்தில் கட்டிவைத்து பொதுமக்களே அடித்து உதைத்து ஊரைவிட்டுத் துரத்தி விடுவார்கள்.

அப்படியிருக்க, இந்த வக்கிர வீடியோக்கள் எல்லாம் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசின் பூர்வீக கிராமமான சின்னப்பம்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில்தான் பெரும்பாலும் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுவது கோவை மண்ணின் மக்களுக்கே பேரதிர்ச்சியாக உள்ளது. இது எப்படிச் சாத்தியம்? அப்படியானால் பொள்ளாச்சி கிராமங்கள் எல்லாம் பழைய மாண்பையும் கட்டுப்பெட்டித்தனத்தையும் இழந்துவிட்டதா? இந்தச் சம்பவம் குறித்து என்ன சொல்கிறார்கள் சின்னப்பம்பாளையத்து மக்கள் என்று அங்கு நேரடியாவே சென்று பார்த்தேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE