மோடியை வீட்டுக்கு அனுப்பக் வீட்டுக்கு அனுப்பக் காத்திருக்கிறார்கள் மக்கள்!

By காமதேனு

பீட்டர் அல்போன்ஸ்

தேர்தல் என்பது ஒரு தேசம் தனது ஆன்மாவை சுயபரிசோதனை செய்துகொள்ளும் நேரம் என்றே நான் பார்க்கிறேன். பெரும்பான்மை மக்கள் தாங்கள் விரும்பும் வகையில், அமைதியான முறையில் ஏற்படுத்தும் அதிகார மாற்றத்துக்கான கருவியே தேர்தல். இந்த அதிகார மாற்றத்தின் வாகனங்கள் அரசியல் கட்சிகளே. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் என்பவை ஒரு தேர்தலிலிருந்து மற்றொரு தேர்தலை நோக்கி மக்களை ஏற்றிச்செல்வதும்தான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதோ அல்லது தங்களது மக்கள் பிரதிநிதிகள் மீதோ வாக்களித்த வாக்காளர்களுக்கு எவ்வளவு அதிருப்தி இருந்த போதிலும் அவர்களை  ஐந்தாண்டுகளுக்கு இடையில் திரும்ப அழைத்துக்கொள்ள அதிகாரம் இல்லை. வாக்காளர்கள் தங்களது அரசியல் விருப்பத்தை நிறைவேற்ற ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஐந்தாண்டுகள் வேறு வழியின்றிப் பொறுமைகாக்கும் மக்கள், தங்களது ஏமாற்றத்தை, கோபத்தை ஆளும் அரசுக்கு உணர்த்த வாக்குச் சீட்டுகளுடன் காத்திருக்கிறார்கள்.

ஒரு ஆட்சி மாற்றத்துக்காக மட்டும் அவர்கள் வாக்களிக்கப் போவதில்லை. இந்தியா எனும் தத்துவத்தின் மரபணுக்களையும், அதன் ஜனநாயக நிறுவனங்களையும், சமூக நீதியையும், பன்முகக் கலாச்சாரத்தையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதற்காக அவர்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE