திருச்சி தொகுதி யாருக்கு? நேரு கையில் பம்பரத்தின் சாட்டை!

By காமதேனு

கரு.முத்து, அ.வேலுச்சாமி

திருச்சி தொகுதி வைகோவுக்கா, காங்கிரஸுக்கா... திமுக கூட்டணியில் இப்போது நடந்துகொண்டிருக்கும் பரபரப்பான விவாதங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. கடந்தகால நாடாளுமன்றத் தேர்தல் வரலாறைத் திருப்பிப் பார்த்தால் திருச்சியைப் பெரும்பாலும் தனது கூட்டணித் தோழனுக்கே ஒதுக்கித் தந்திருக்கிறது திமுக.

அந்த வகையில், இங்கே நான்கு முறை வென்ற காங்கிரஸின் அடைக்கல ராஜ் குடும்பமும் ஒருமுறை வென்ற மதிமுக, வைகோவுக்காகவும் முட்டி மோதுகின்றன. தங்களுக்கே இந்தத் தொகுதி என்ற நம்பிக்கையில் இரண்டு கட்சிகளுமே தேர்தல் வேலைகளில் பரபரக்கின்றன.

காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்பி-யான அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸை இங்கே வேட்பாளராக முன்னிலைப்படுத்துகிறார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நாளிலிருந்து டெல்லியில் முகாமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார் அவர். விருதுநகர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டாலும் அங்கே வைகோவால் நினைத்த மாதிரி கரையேற முடியவில்லை. அதனால், இந்த முறை அவரை மதிமுக நிர்வாகிகளே திருச்சிக்கு இழுத்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE