வழக்கமான தேர்தல் அல்ல; வாழ்வா சாவா போராட்டம்!

By காமதேனு

பேராசிரியர் அருணன்

மோடி ஆட்சி மீண்டும் வருமானால், அடுத்தது பச்சையான சர்வாதிகார ஆட்சிதான்; இன்னொரு ஹிட்லரை உலகம் காணும், அது இந்தியாவால் நிகழும்!

இது ஏதோ கெட்டகனவு அல்ல. இன்றைய நடப்புகள் சுட்டும் எதிர்காலத்துக்கான எச்சரிக்கை. மதச்சார்பற்ற அரசு, மக்களின் அடிப்படை உரிமைகள், மாநில சுயாட்சி, நீதிமன்றத்தின் சுயேச்சைத் தன்மை, ஊடகங்களின் சுதந்திரம் என்பவை நமது ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள். அவை இந்த ஆட்சியில் என்ன பாடுபடுகின்றன என்பதை எண்ணிப்பாருங்கள்.

நமது அரசியல் சாசனம் மக்களுக்கு மத உரிமையைத் தந்து, அரசை சகல மதங்களிலிருந்தும் விலகியிருக்கச் சொல்கிறது. ‘மதச்சார்பற்ற குடியரசு’ என்று அதன் முகவுரை கூறுவதன் அர்த்தம் அதுதான். ஆனால், நடப்பதோ தலைகீழ். இங்கே மக்களின் மத உரிமை பறிக்கப்படுகிறது. சிறுபான்மை மதத்தவர் இரண்டாந்தரக் குடிமக்களாக பாவிக்கப்படுகிறார்கள். பெரும்பான்மை மதத்தவரின் நம்பிக்கைகள் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன அரசின் ஆசிர்வாதத்தோடு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE