மாரடைப்புக்கு டாட்டா!

By காமதேனு

டாக்டர் கு. கணேசன்
gganesan95@gmail.com



ஒருவருக்கு நெஞ்சில் ஏற்படும் வலி மாரடைப்பின் அறிகுறியாகத் தெரிந்தால், அருகில் இருப்பவர்கள் ஆம்புலன்ஸ் வேகத்தில் இயங்க வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் ஒரு மணி நேரம்தான் உயிர் காக்கும் ‘பொன்னான நேரம்’. அந்த நேரத்துக்குள் அவருக்குத் தேவையான ‘வி.ஐ.பி.’ சிகிச்சைகள் கிடைத்துவிட்டால், உயிர் பிழைத்துக்கொள்வார்.
முதலில், அவசர மருத்துவம் செய்யும் ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும். அப்புறம் பயனாளியை ஆசுவாசப்படுத்த வேண்டும்; படுக்கச்சொல்ல வேண்டும். முக்கியமாக, அவரைப் பதறவிடக்கூடாது; நகரவிடக்கூடாது. அடுத்து, நான் சொல்லும் மூன்று மாத்திரைகளை அவருக்குக் கொடுக்க வேண்டும்.

என்னென்ன மாத்திரைகள்?

ஆஸ்பிரின் 325 மி.கி. ஒன்று, அட்டார்வாஸ்டேடின் 80 மி.கி. ஒன்று அல்லது ரோஸ்வாஸ்டேடின் 40 மி.கி. ஒன்று, குளோபிடோகிரில் 150 மி.கி. இரண்டு மாத்திரைகள் தர வேண்டும். இவை ரத்தம் உறைவதைத் தடுத்து, மாரடைப்பு தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ளும் பாதுகாப்புப் படை வீரர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE