அக்கா வர்றாங்க வழியை விடு... மதுரை `தமிழிசை’ மஹா பேரணி!

By காமதேனு

கே.கே.மகேஷ்

உகாண்டா விவகாரம் முதல் உதயநிதி சினிமா வரைக்கும் கருத்துச் சொல்லியே பெயர் வாங்கிய தமிழிசையைப் போலவே ஒருவர் இருக்கிறார் மதுரையில். பெயர் மஹாலட்சுமி. பாஜக மாநில மகளிரணி தலைவி. கட்சியை எதிர்பார்க்காமல், சொந்தக்காசில் விழா நடத்தி, தலைவர்களுக்கு மட்டுமின்றி தனக்குத்தானே மலர்க்கிரீடமும், வீரவாளும் பரிசளித்து மகிழ்பவர். சமீப ஆண்டு களாக ஜனவரி 7-ல் தனது பிறந்தநாளை ‘மக்களோடு மஹாலட்சுமி’ என்று பெயரில் நடத்தி, அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி பாணியில் நலத்திட்ட உதவிகளை வழங்குபவர்.

இவ்வளவு பிரபலமானவர், ‘மீண்டும் மோடி... வேண்டும் மோடி’ என்ற பெயரில் கடந்த 13-ம் தேதி, மதுரையில் மகளிர் மட்டும் ‘மாபெரும்’ இருசக்கரப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்காக ஒட்டியிருந்த போஸ்டர்கள் நகரையே பரபரப்புக்குள்ளாக்கிவிட்டன. அதிலும், காண்டாமிருகம் மாதிரியான ‘என்ஃபீல்டு’ பைக்கில் மஹாலட்சுமி கம்பீரமாக உட்கார்ந்திருப்பது போல ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்தான் ஒரே பேச்சு. அக்கா எப்படி பைக் ஓட்டுறாங்கனு பேரணிக்கே போய் நேரில் பார்த்துவிடுவோமே என்று கிளம்பினேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE