சைஸ் ஜீரோ 20: டயட்: 5 கேள்விகள் 5 பதில்கள்

By காமதேனு

ருஜுதா திவேகர்

டயட் பழகுவது தொடர்பாக எனது க்ளையன்டுகள் சிலரின் கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களைப் பற்றித்தான் இந்த இறுதி அத்தியாயத்தில் பார்க்கவிருக்கிறோம்.

டயட் ஒருநாள் கூத்து அல்ல; வாழ்நாளுக்கான பழக்கம் என்பதை தெளிவுபடுத்திய மகிழ்ச்சியில் இப்போது சில சந்தேகங்களைத் தீர்க்க விழைகிறேன். எனக்கு வந்த கடிதங்களில் நான் மிக முக்கியமானதாகக் கருதிய 5 கேள்விகளுக்கான பதிலை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

தென்னிந்தியர்களின் பிரதான உணவே அரிசிதான். ஆனால், இந்தக் காலத்தில் யார் டயட் ஆலோசனை சொன்னாலும் முதலில் அரிசியைத்தான் குறை சொல்கிறார்கள். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. உண்மையிலேயே கோதுமை, கேப்பை, கம்பு ஆகியன அரிசியைவிட சிறந்த உணவா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE