கனிமொழி பராக்... களைகட்டும் தூத்துக்குடி தேர்தல் களம்!

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்

ஊராட்சி சபைக் கூட்டங்கள் மூலமாக அடித்தட்டு மக்களின் மனம் தொட்டுப் பேசிக்கொண்டிருக்கிறது திமுக. ஆனால், ஊராட்சி சபை கூட்டத்தை முன்வைத்து, தான் போட்டியிடவிருக்கும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு சுற்று தேர்தல் பிரச்சாரத்தையே ஓசையின்றி முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி!

மூன்று வருடங்களுக்கு முன்பே தூத்துக்குடி தொகுதியைத் தனக்கான தேர்தல் களமாகத் தேர்வுசெய்துவிட்டார் கனிமொழி. கட்சித் தலைமையும் அதற்கு இசைவு தெரிவித்ததால் உற்சாகமாகக் களத்தில் இறங்கியவர், முதலில் செய்த நல்ல காரியம், வைகுண்டம் தாலுக்காவில் உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தத்தெடுத்தது.

இங்கே ஹெல்த் சென்டர், பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஒரு கோடி ரூபாய் செலவில் அமைத்துக் கொடுத்தவர், மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல் தனது நட்பு வட்டத்தின் உதவியோடும் தனது பொறுப்பிலிருந்தும் லட்சங்களைச் செலவுசெய்து வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தின் பொதுக்குளத்தையும் தூர்வாரிக் கொடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE