படித்தது ஐந்தாம் வகுப்பு... பெற்றது சாகித்ய அகாடமி விருது..!

By காமதேனு

என்.சுவாமிநாதன்

நாகர்கோவில் அல் அமீன் நகரில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குதான் இருக்கிறது குளச்சல் மு.யூசுப்பின் வீடு. சொந்த ஊர் குளச்சல் என்பதால் அதையும் பெயரோடு சேர்த்துக்கொண்ட யூசுப்புக்கு மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைத் தொழிலாளியாகத் தன் வாழ்வைத் தொடங்கி பொருளாதார ரீதியாக எவ்வித ஏற்றத்தையும் எப்போதும் சந்தித்திராத யூசுப்புக்கு கிடைத்துள்ள இந்த விருதை ஆகச்சிறந்த அங்கீகாரம் எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது படைப்புலகம்.

இதுவரை 32 படைப்புகளை யூசுப் எழுதியுள்ளார். அதில் ’பாரசீக மகாகவிஞர்கள்’ என்ற படைப்பு மட்டுமே நேரடியானது. ‘திருடன் மணியன்பிள்ளை’ உள்ளிட்ட 31 படைப்புகளை மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். யூசுப்பை காமதேனுவுக்காக அவரது இல்லத்தில் வைத்துச் சந்தித்தேன்.

உங்களது இளமைக்காலம் குறித்துச் சொல்லுங்களேன்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE