காவல் ( துப்புரவு ) ஆய்வாளர் அம்பேத்கர்!

By காமதேனு

கரு.முத்து

கடமையைச் செய்வதற்கே காலநேரம் பார்க்கும் காவல் துறையிலும் அவ்வப்போது வித்தியாசமான சில அதிகாரிகளும் அவதாரம் எடுப்பார்கள். அப்படியான ஒரு மனிதர்தான் ஆய்வாளர் அம்பேத்கர்!

மக்களுக்கு காவல் பணி செய்வது மட்டுமல்ல... தேவைப்பட்டால் சாக்கடை அடைப்பை சரிசெய்யவும் போலீஸாருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை அண்மையில் வெளியான ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் கெத்தாக உணர்த்தி யிருப்பார் காவல் ஆய்வாளராக வரும் விஜய் ஆண்டனி. வடலூர் ஸ்டேஷன் காவல் ஆய்வாளரான அம்பேத்கரும் கிட்டத்தட்ட அதே மாதிரியான கேரக்டர்தான். பணிபுரியும் இடத்தை கோயில் என்பார்கள். போலீஸ் ஸ்டேஷனை மட்டுமல்ல... அது சார்ந்த ஊரின் தூய்மையிலும் அக்கறை செலுத்தி வருகிறார் அம்பேத்கர்.

இதற்கு முன்பு சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தின் ஆய்வாளர். புறவழிச் சாலையில் கருவேல மரங்களுக்கு மத்தியில், இருள் மண்டிக் கிடந்தது அந்த ஸ்டேஷன். அந்த ஸ்டேஷனுக்கு இரவில் பொதுமக்கள் யாரும் போக பயப்படுவார்கள். சுற்றிலும் வயல் பகுதி என்பதால் தண்ணீர் தேங்கி, பாம்பு உள்ளிட்ட ஜீவராசிகள் அடிக்கடி ஸ்டேஷனுக்குள் வந்து நலம் விசாரித்துவிட்டுப் போகும். அம்பேத்கர் அங்கு போனதுமே ஸ்டேஷனுக்குத்தான் முதலில் ஒளியேற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE