வீரசைவ மடத்துக்குள் ‘வீர விளையாட்டு!’

By காமதேனு

கரு.முத்து

மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை அடுத்து அங்கு நடைபெற்ற களேபரங்களுக்குச் சற்றும் குறையாத காட்சிகள் கும்பகோணம் வீரசைவ பெரியமடத்தில் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

கும்பகோணம் மகாமகக்குளம் அருகிலிருக்கும் இந்த வீரசைவ பெரிய மடத்துக்கு கர்நாடகம், திருவாரூர், தாராசுரம், இலங்கை உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகளும் கிளைகளும் உள்ளன. அச்சொத்துக்களை நிர்வகிப்பதில் ஏற்பட்ட போட்டியால்தான் தற்போது பிரச்சினை வெடித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக இருந்த நமச்சிவாய மூர்த்திகளின் சீடர் ஆதி சிவப்பிரகாச சுவாமிகள்தான் இம்மடமும் மரபும் தோன்ற காரணமாக இருந்தவர். மயிலம் வீரசைவ மடம், பேரூர் சாந்தலிங்கர் மடம், விருத்தாசலம் குமாரதேவர் மடம், திருக்கோவிலூர் ஞானியார் சுவாமிகள் மடம். திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடம் போன்று பல இடங்களிலும் வீரசைவ மடங்கள் இருந்தாலும் அனைத்துக்கும் முந்தையது கும்பகோணம் வீரசைவ பெரியமடம். கர்நாடகாவுடன் நேரடித் தொடர்புகொண்ட இம்மடத்தின் பீடாதிபதியாகப் பெரும்பாலும் கன்னடர்களே பொறுப்பேற்பார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE