எங்க குலசாமி 7 - இந்த வாரம்: ஏ.வெங்கடேஷ்

By காமதேனு

என்.சுவாமிநாதன்

சாக்லேட், பகவதி, குத்து, வாத்தியார் உள்ளிட்ட 22 திரைப் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இவரது பூர்வீகம் தூத்துக்குடி. இயக்குநர் மட்டுமல்லாது தேர்ந்த நடிகருமான வெங்கடேஷிடம், “உங்க குலசாமியைப் பற்றிப் பேசணுமே...” என்றேன். “பிப்ரவரி 8-ம் தேதி என்னோட அடுத்த படம் ‘நேத்ரா’ திரைக்கு வருது. அதுக்கான வேலைகளில் இருக்கிற இந்த நேரத்துல நீங்களும் சரியா குலசாமி பத்தி கேக்குறீங்க. அப்டீன்னா இதுகூட எங்க குலசாமியின் அனுக்கிரகம்தான்” என்றவாறே பேசத் தொடங்கினார்.

“ஒண்ணு இல்ல... எங்களுக்கு ரெண்டு குலதெய்வங்கள் இருக்கு. கோவில்பட்டி பக்கத்துல இருக்குற கழுகுமலை முருகன் கோயிலுக்குப் பின்னாடி மிகப்பெரிய பாறை ஒண்ணு இருக்கும். அந்தப் பாறை மேல ஏறிப்போனா, மேல அய்யனார். பேச்சியம்மன்னு நாலஞ்சு தெய்வங்கள் வரிசையா இருக்கும். அதில் ஒண்ணா இருக்கிற ‘ஆணைக்கால் சாஸ்தா’வைத் தான் எங்க தாத்தா குலதெய்வமா வணங்குனாங்க. ஆரம்பத்துல இது மட்டும்தான் எங்க குலசாமியா இருந்துருக்கு. திடீர்ன்னு தாத்தாவுக்கு திருச்செந்தூர் பக்கத்தில் இருக்குற அருணாச்சல சுவாமிகள் மேலயும் ஈர்ப்பு ஏற்பட்டுருக்கு.

அருணாச்சல சுவாமி ஒரு சித்தர். ஏரலில் அவர் சேர்மனாவும் இருந்துருக்காரு. அதனால, ‘சேர்மன் அருணாச்சல சுவாமி’ன்னுதான் சொல்லுவாங்க. தான் வழிபட்டதோட இல்லாம எங்க அப்பாவையும் அருணாச்சல சுவாமியை வழிபடச் சொல்லிருக்காரு எங்க தாத்தா. அப்பா வழியில நானும் சேர்மன் அருணாச்சல சுவாமியை குலதெய்வமா வழிபட ஆரம்பிச்சுட்டேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE