ஆஸ்கரை நெருங்கிய முதல் தமிழர்!

By காமதேனு

திரைபாரதி

பார்ப்பவர்கள் சட்டென்று திடுக்கிடும் விகாரமான தோற்றம் கொண்டவர் அப்பா. அவரைப்போன்ற தோற்றத்துடன் பிறந்துவிடும் முதல் மகன். மாசு மருவற்ற அழகான முகத்துடன் பிறந்தவர் இரண்டாவது மகன். இம்மூன்று பரிமாணங்களில் சிவாஜியின் நடிப்பாளுமையைத் திறம்பட வெளிப்படுத்திக்காட்டினார் அந்த இயக்குநர். சினிமா பேசத்தொடங்கி 38 ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அந்தத் தமிழ்ப் படம் ‘தெய்வமகன்’ (1969). அதை இயக்கியவர் ஏ.சி.திருலோகசந்தர். ‘திரிலோக் சார்’ என்று இறுதிவரை மரியாதையுடன் அழைக்கப்பட்டவர், சிவாஜியின் நடிப்பில் 25 படங்களை இயக்கிய சாதனைக்கு உரியவர்.

தொடக்ககால இயக்குநர்களில் ஒருவரான ஆர்.பத்மநாப ஐயரின் இயக்கத்தில், எம்.ஜி.ராமச்சந்தராக வளர்ந்து வந்த எம்ஜிஆர் நடித்த படம் ‘குமாரி’. அதில் ஆர்.பத்மநாபனிடம் உதவி இயக்குநராகத் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார் திருலோகசந்தர். அந்தப் படத்தில் எம்ஜிஆரின் நம்பிக்கையையும் நட்பையும் பெற்றார். ‘குமாரி’ படம் வெளிவந்து 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை வைத்து ‘அன்பே வா’ படமெடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அந்த சூப்பர் ஹிட்டிலும் பெரிய சுவாரசியம் உண்டு. எம்ஜிஆருக்கான ஹீரோயிசம் உருவாக்கப்பட்டு நிலைபெற்றுவிட்ட காலகட்டம் அது. அவர் நடித்த படங்களின் திரைக்கதைகளில் எம்ஜிஆர் பாணி காட்சி அமைப்புகள் வலியப் புகுத்தப்பட்டன. ஆனால், அப்படி எந்த அடையாளமும் இல்லாமல், ஒளிப்பதிவாளர் மாருதி ராவின் துணையுடன் காட்சிமொழியின் உச்சங்களுடன் காதல் காவியமாக, ‘அன்பே வா’ படத்தை உருவாக்கி வெற்றி கொடுத்தவர் திருலோகசந்தர்.

மகிழ்ச்சியும் உருக்கமும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE