அவங்களும் அந்த அரங்கில் இருந்திருப்பாங்க!- நட்புக்காக ஒரு நாட்டியாஞ்சலி

By காமதேனு

நா.இரமேஷ்குமார்

பரபரப்பாக பழகிய சென்னை, அதன் குடியிருப்புவாசிகள் சொந்த ஊருக்குக் கிளம்பியதால், களையிழந்திருந்த மார்கழி மாதத்தின் கடைசி நாளில் மாலைப் பொழுதில், பெசன்ட்நகர், கலாசேத்ரா காலனியில் அக்மாரலைச் சந்தித்தேன்.

அக்மாரல், கஜகஸ்தான் நாட்டுப் பெண்மணி. கலாசேத்ராவின் முன்னாள் மாணவி. அதைவிட, அக்மாரலைப் பற்றி பெருமைப்பட இன்னொரு விஷயம் இருக்கிறது. பழகிய நட்புக்கு மரியாதை செலுத்துவதற்காக, கஜகஸ்தானில் இருந்து இந்தியா வந்திருக்கிறார்.

விலாசம் தேடி, காலிங் பெல் அழுத்தினால், ``வணக்கம்... 
தோழர். உள்ளே வாங்க’’ என்று காம்ரேட் வரவேற்புடன் சிரிக்கிறார்.
உள்ளே போய் அமர்ந்ததுமே தனது இந்தியப் பயணத்தை 
ஒரு கதை மாதிரி விவரிக்கிறார் அக்மாரல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE