அனைத்து ராஜதந்திரங்களும் வீண்!

By காமதேனு

கடந்த வாரம் ஊரெல்லாம் ஒரே பேச்சு.  எல்லாம் தமிழக அரசின் 1000 ரூபாய் பொங்கல் பரிசு பற்றித்தான்.  “நீ வாங்கிட்டியா, நான் வாங்கிட்டியா” என ஆரம்பித்த அந்தப் பேச்சு கடைசியில்,  “நீ வாங்கலயா, சோன முத்தா போச்சா” என்று வாங்கியவர்கள் கிண்டலடிக்கும்படியாக மாறிப்போனது. காரணம், வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் தவிர யாருக்கும் இந்தப் பொங்கல் பரிசு கொடுக்கக் கூடாது உத்தரவிட்டுவிட்டது நீதிமன்றம். ஈபிஎஸ்-சும்என்னவெல்லாமோ செய்து தன்னை சாதனை முதல்வராகக் காட்டிக்கொள்ள நினைக்கிறார். ஆனால், அவரது ராஜதந்திரங்கள் அனைத்தும் கடைசியில் வீணாகிவிடுகின்றன. கடந்த வாரம் பேட்ட, விஸ்வாசம் ரிலீஸ், ரிவியூக்கள் ஒருபக்கம் இணையத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும்,  மறுபக்கம், பொங்கல் பரிசு குறித்த விவாதங்களுக்கும் மீம்களுக்கும் சரிக்கு சமமாக இடம் கொடுத்தனர் நெட்டிசன்கள்.

பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை.- செய்தி
ஓட்டுக்குப் பணம் கொடுக்குறதை எல்லாம் 
விட்டுட்டு இப்படி பொங்கலுக்கு உலை வைக்கறீங்களே நியாயமாரே! 
- மெத்தவீட்டான்

‘பூரி’ தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.- செய்தி
அப்போ 'குருமா' கன்ஃபார்ம்..?!  - மித்ரன்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம். -  செய்தி
ஏண்ணே அடிச்ச டோக்கன்லாம் வேஸ்ட் ஆகிருச்சா..?!- மித்ரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE