பட்டி பெருக... பால்பானை பொங்கப் பொங்க...

By காமதேனு

கரு.முத்து

தங்கள் விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் சூரியனுக்கும் மாடுகளுக்கும் உழவர்கள் நன்றி செலுத்தும் திருநாள் தைப்பொங்கல். இதோ வந்துவிட்டது அந்தத் திருநாள்!

நகரத்து மக்கள் வீட்டுக் குக்கரில் பொங்கல் வைத்தே பழகிவிட்டார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை... அவர்கள் வீட்டு வாசல் மூன்று பேருக்குச் சொந்தமாக இருக்கும். அப்படி இருக்கையில், எங்கே வாசலில் கோலமிட்டு மண் பானை வைத்து பொங்கலிடுவது? அப்படியே வைத்தாலும், ”ஐயோ... புகையைக் கிளப்புகிறார்களே?” என்று அக்கம் பக்கத்தில் பிரச்சினையைக் கிளப்புவார்கள்.

கிராமங்களில் இந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. இன்னமும் வீட்டு வாசலில்தான் பொங்கல் வைக்கிறார்கள். அதுவும் மாட்டுப் பொங்கலின் போது, ஒவ்வொருத்தரும் உறவுகளை மட்டுமில்லாது தங்களது அண்டை வீட்டாரையும் அழைத்துக்கொண்டு, “பட்டி பெருக... பால்பானைப் பொங்கப் பொங்க... பொங்கலோ... பொங்கல்!” என்று உற்சாகக் குரல் எழுப்பி, வருடம் முச்சூடும் தங்களுக்காக உழைக்கும் கால்நடைகளுக்கு அணி வகுப்பு மரியாதை செய்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE