ருஜுதா திவேகர்
ஒரு நாளில் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில் நிம்மதியான தூக்கத்துக்கான உபகரணங்களின் விளம்பரங்கள் எத்தனை இடம்பெறுகின்றன என்பதை என்றாவது நீங்கள் உற்றுக் கவனித்திருக் கிறீர்களா? இல்லையென்றால் ஒருமுறை கவனித்துப் பாருங்களேன்.
கொசுவிரட்டிகள், மெத்தைகள், மெத்தை விரிப்புகள், ஏசி, ஃபேன், இருமல் மருந்து, நைட்டி, லுங்கி என இவையெல்லாமே நிம்மதியான உறக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கும். இவற்றைப் பயன்படுத்தினால் காலையில் உற்சாகமாக எழுந்திருக்க முடியும் என்பதுபோல் ஒரு ஷாட் நிச்சயம் வைத்திருப்பார்கள். ஏனெனில், உறக்கமும் அதன் நீட்சியாக உற்சாகமான எழுதலுமே ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை. அதனால்தான் 4 கொள்கைகளில் நான் நிம்மதியான உறக்கத்தையும் பட்டியலிட்டிருக்கிறேன்.
உறக்கமில்லா இரவுகள் என்ன செய்யும்?