ஒரு நாள் காமராஜர்... இன்னொரு நாள் கருணாநிதி!- சூடக்கடை சுகுமாறனின் மல்டி பெர்சனாலிட்டி!

By காமதேனு

கே.கே.மகேஷ்

நான் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள பழமையான கோயிலுக்கு ஒரு எட்டுப் போய் பார்த்துவிடுவது வழக்கம். அங்கே விசித்திரமான செய்தியோ, மனிதரோ தட்டுப்படுவார்கள். அப்படி சமீபத்தில், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை சசிவர்ணேஷ்வர் கோயிக்குப் போனபோது, “இது பள்ளிப்படை கோயில்” என்றார்கள். அதாவது, மன்னரின் சமாதியில் அமைக்கப்பட்ட கோயில். மன்னர் சசிவர்ண பெரிய உடையனத்தேவரின் சமாதியில் லிங்கமும், ராணி அகிலாண்டேஸ்வரியின் சமாதியில் ஆவுடையும் வைத்து, மன்னர் குடும்பத்தினர் வழிபட, பின்னர் அதுவே சிவன் கோயிலாக மாறிவிட்டதாம்.

இதைக் கேட்டுக்கொண்டு அப்படியே காசிவிஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோயிலுக்கும் போனேன். அங்கே ஒரு மனிதர் சிக்கினார். கோயில் வாசலில் தேங்காய், பழக்கடை வைத்திருக்கிறார். ஆனாலும், ரைமிங்காக இருக்கட்டுமே என்று ‘சூடக்கடை சுகுமாறன்’ என்றே தன்னை அழைத்துக் கொள்கிறார். கடை முகப்பில் ஒரு நாய் சிலை வைத்திருக்கிறார். உள்ளே பெரிய சைசில் ஒரு அண்ணாசிப்பழ படத்தையும் தொங்கவிட்டிருக்கிறார். அதுவல்ல விசேஷம்... காமராஜர், நடிகர் பிரபு, சச்சின் ரெண்டுல்கர் உள்ளிட்டவர்களின் போட்டோக்களில் அவர்களின் முகத்தைத் தூக்கிவிட்டு இவரது முகத்தை வைத்திருக்கிறார்.

“என்னண்ணே இது?” என்று கேட்டால், “நான் எதையுமே வித்தியாசமா சிந்திக்கிற ஆளு தம்பி. இந்தப் போட்டோவையும் பாருங்க” என்று மேற்கொண்டு சில படங்களைக் காட்டினார். கருணாநிதி, ரஜினி, டிடிவி.தினகரன், லலிதா ஜூவல்லரி ஓனர் ஆகியோரது உடம்பிலும் இவரது தலையை ஒட்டி கிராஃபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE