‘சான்டா’வாக மாறிய சச்சின்

By காமதேனு

தொகுப்பு: தேவா

இந்தியக் கிரிக்கெட் அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டிருந்த சமயத்தில், மும்பையில் உள்ள ஒரு குழந்தைகள் நலக் காப்பகத்தில் இருந்தார் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சச்சின். கிறிஸ்துமஸ் தாத்தா ‘சான்டா’ போல் உடையணிந்து, அங்கிருந்த குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சான்டாவாக மாறிய சச்சின் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி, அவர்களுக்கு இனிப்பு வழங்கி, அந்த நாளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு மறக்கமுடியாத நாளாக மாற்றினார். இவையெல்லாம் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் இணையத்தில் பகிரப்பட்டு அதிகளவில் ட்ரெண்ட் ஆகின. 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர் 
ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு. - செய்தி 
இது கட்சியா இல்ல வாட்ஸ் - அப் குரூப்பா... ஆளாளுக்கு ஆட் பண்ணி ரீமுவ் பண்ணி விளையாடுறாங்க..?!
- மித்ரன்

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம். 
- செய்தி
அப்படியே அந்த புதிய 20 ரூபாய் நோட்டுல கவர்னர் கையெழுத்துக்குப் பதிலா தினகரன் கையெழுத்தை மாற்றவும். டோக்கன் கொடுக்க வசதியா இருக்கும் ..?!
- ஆர்வக்கோளாறு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE