எங்க குலசாமி 3- இந்த வாரம்: த.வெள்ளையன்

By காமதேனு

என்.சுவாமிநாதன்

வாடாப்பூ அம்மன்

தூத்துக்குடி மாவட்டம், பிச்சிவிளை கிராமம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையனின் பூர்வீகம். அங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் எள்ளுவிளையில் இருக்கிறது வாடாப்பூ அம்மன் கோயில். இதுதான் வெள்ளையனின் குலதெய்வம்.

“உங்க குலதெய்வம் பத்தி பேசணுமே...” என்றதுமே “வெள்ளிக்கிழமை தவறாம எங்க வாடாப்பூ அம்மன் கோயில்ல விசேஷ பூஜை இருக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை நேரா பிச்சிவிளைக்கு வந்துடுங்க…சேர்ந்தே கோயிலுக்குப் போயிடலாம்” என்றார். அவர் சொன்னபடியே வெள்ளிக்கிழமை பிச்சிவிளையில் அவரது வீட்டில் இருந்தேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE