சைஸ் ஜீரோ 23- ஓடி விளையாடு பெண்ணே...

By காமதேனு

ருஜுதா திவேகர்

ஓடி விளையாடு பாப்பா என்று பாரதி பாடியதை பெண் பிள்ளைகள் தவறாகப் புரிந்துகொண்டனரோ என்னவோ பூப்பெய்தும் வயது வந்தவுடனேயே விளையாட்டை மூட்டைகட்டி வைத்துவிடுகின்றனர். இந்தியா முழுவதுமே இதே நிலைதான் என்றாலும்கூட இது தமிழ் சமூகத்துக்கு மிக அதிகமாகப் பொருந்தும். பூப்பெய்தபிறகு பெண் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுகூட தாயம், பல்லாங்குழி, சொட்டாங்கல் எனச் சுருங்கிவிடுகிறது. நகர்ப்புறம் என்றால் செஸ், வீடியோ கேம், பிசினஸ் கேம், லூடோ என நாகரிகமான உள் அரங்கு விளையாட்டாகி விடுகிறது. இவை எல்லாமே உட்கார்ந்த இடத்திலேயே இருந்து விளையாடும் விளையாட்டுகள்.

பாப்பாவாக ஓடி விளையாடியவர்கள் பாவையாக ஒதுங்கி ஒடுங்கிவிடுகின்றனர். பெரும்பாலும் அவர்களாகவே அல்ல... சமூகம் விதித்த கட்டுப்பாடுகளால் அவ்வாறு சுருங்கிக் கொள்கின்றனர். கூட்டுக்குள் ஒதுங்கும் அவர்கள் அதன்பின்னர் நத்தைபோல்தான் நகர்கிறார்கள்.

ஆனால், உண்மையில் விளையாட்டுக்கு வயது ஏதுமில்லை. ஐந்திலும் விளையாடலாம் ஐம்பதிலும் விளையாடலாம். விளையாட்டு நம் வாழ்வின் ஒரு அங்கம். வாழ்வது ஒரு வாழ்க்கை அதில் ஏன் அர்த்தமற்ற கட்டுப்பாடுகள்? சிந்திப்பீர்! விளையாடுவீர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE