ஹாட் லீக்ஸ்: என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!

By காமதேனு

என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் தனக்குத் தெரியாமல் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக குமைகிறா ராம் ஓபிஎஸ். கஜா புயல் நிவாரண நிதி பெறுவது தொடர்பாக அண்மையில், அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் டெல்லிக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால், அப்படிப் போனவர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து தேர்தல் கூட்டணி பற்றியும் பேசினார்களாம். இதுபற்றிய விவரங்கள் எதுவும் ஓபிஎஸ்ஸுக்கு தெரிவிக்கப்படவில்லையாம். இப்படி ஈபிஎஸ் வகையறாக்களால் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வரும் ஓபிஎஸ் சீக்கிரமே பொங்கி வெடித்தாலும் வெடிக்கலாம் என்கிறார்கள்.

அண்ணன் வர்றார்... வழிவிடுங்கோ!

ஆரணி தொகுதி அதிமுக எம்பி ஏழுமலை. 2001-ல்  அதிமுக ஆட்சி அமைத்தபோது, வணிகவரித் துறை அமைச்சராக முதலில் அறிவிக்கப்பட்டவர். ஆனால், பதவியேற்புக்கு ஒரு மணி நேரம் முன்னதாக மருத்துவர் ராமதாஸ் சிபாரிசு செய்ததால் ஏழுமலைக்குப் பதிலாக சி.வி.சண்முகம் அமைச்சரானார். இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ‘நியூஸ் ஜெ’ சேனலின் எம்டி-யும் தனது  அண்ணனுமான சி.வி.ராதாகிருஷ்ணனை ஆரணி தொகுதியில் நிறுத்த காய் நகர்த்துகிறாராம் சண்முகம். “உங்களுக்கு எம்எல்ஏ ஸீட் வாங்கித் தர்றேன். நீங்க நாடாளுமன்றத் தேர்தல்ல அண்ணனுக்காக வேலை பார்க்கணும்” என்று ஏழுமலையிடம் சொல்கிறாராம் அமைச்சர். கடந்த வாரம் அமைச்சர் சண்முகம் டெல்லி சென்றிருந்தபோது அவரைச் சந்தித்த ஏழுமலை, “உங்களுக்கெல்லாம் நான் சீனியர். அன்னைக்கி எனக்கு வரவேண்டிய அமைச்சர் பதவிய உங்களுக்குக் குடுத்தாங்க. இப்ப, என்னோட எம்பி பதவிக்கும் உங்க அண்ணன நிறுத்தப் பாக்குறீங்களே..!” என்று விரக்திப்பட்டுப் பேசினாராம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE