குடும்பக் கதைகளின் காதலர்!

By காமதேனு

நாற்பதுகளின் ஹாலிவுட் சினிமாவை ‘சஸ்பென்ஸ்’ எனும் அம்சம் கொண்டு மடைமாற்றியவர் ஆல்பிரட் ஹிட்ச்காக். ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று கொண்டாடப்படும் அளவுக்குப் படங்களை எடுத்துக் குவித்தார். சூழல் கைதியாக, குற்றம் ஒன்றைச் செய்துவிடும் முதன்மைக் கதாபாத்திரம். அதை மறைப்பதற்காகச் செய்யும் தகிடு தத்தங்கள். இறுதியில் போலீஸ் வைக்கும் பொறியில் எலியாக அது சிக்கிவிடுவதைச் சற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதையாக்கியவர். ‘க்ரைம் த்ரில்லர்’ என்ற சினிமா வகைக்கான இலக்கணங்களை இவ்வகைப் படங்கள் மூலம் உருவாக்கிவர் ஹிட்ச்காக். தனது வழியில் உலகின் பல நாடுகளில் ‘ஹிட்ச்காக்கியன்’ வகை சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். தமிழ் சினிமாவில் ‘ஹிட்ச்காக்கியன்’ வகை சினிமாவை கருப்பு வெள்ளை காலத்திலேயே பலர் முயன்று பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு முழுமையான ‘ஹிட்ச்காக்கியன்’ தமிழ் சினிமாவைத் தருவதில் சாதித்துக் காட்டினார் ஒரு இயக்குநர். அவர்தான் தாதா மிராசி. அவர் இயக்கிய அந்தப் படம் ‘புதிய பறவை’.

சிவாஜியின் தனித்த நடிப்பு பாணிக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்றாகத் திகழ்கிறது ‘புதிய பறவை’. சிவாஜி ரசிகர்களை
யும் தாண்டி இன்றுவரை அந்தப் படத்தில் கொண்டாடப்பட்டுவரும் பாடல் ‘எங்கே நிம்மதி’. இசையும் வரிகளும் மட்டுமல்ல,
கதாநாயகன் கோபாலின் கடந்த காலத்தில் ஒளிந்திருக்கும் இருட்டான பக்கங்களிலிருந்து வெளிவரத் துடிக்கும் உண்மை
கள் பேய்களாய் மாறி, அவரை நெருங்கி மிரட்டுவதுபோல் படம் பிடித்துக் காட்டிய காட்சிமொழி ரசிகர்களை மிரள வைத்தது. இன்றைய கதாநாயகர்களுக்கும் ‘எங்கே நிம்மதி’ பாடலின் காட்சிமொழி பயன்படுத்தப்படுகிறது என்றால் தாதாமிராசியின் திறமையைப் புரிந்துகொள்ளமுடியும்.

எம்ஜிஆர் பிக்சர்ஸின் போட்டி நிறுவனமாகக் கருதப்பட்ட சிவாஜி பிலிம்ஸின் முதல் வண்ணப்படமான ‘புதிய பறவை’ பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைக் கண்ட எம்ஜிஆர், ‘அந்தப் படத்தில் அப்படி என்னதான் ஸ்பெஷல்’ என்று தெரிந்துகொள்ள விரும்பி, சாண்டோ சின்னப்பா தேவரிடம், “புதிய பறவை படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். அவரும் வாகினி ஸ்டுடியோவில் யாருக்கும் தெரியாமல் எம்ஜிஆருக்கு மட்டும் ‘புதிய பறவை’ படத்தை திரையிட ஏற்பாடு செய்தார். படத்தைப் பார்த்து முடித்ததுமே “தாதா மிராசி மிகப் பெரிய டைரக்டர்” என்று தேவரிடம் கூறி விட்டுச் சென்றார் எம்ஜிஆர்.

குடும்பமே கோயில்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE