யார் அந்த பிர்ஸா முண்டா..?

By காமதேனு

ந.வினோத் குமார்

புகழ்பெற்ற ஒருவரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது புதிதல்ல. வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இயக்குநர்களால் குறிப்பிட்ட ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதும் புதிதல்ல. ஆனால், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு இயக்குநர்கள், ஒரே மனிதரைப் பற்றி, வெவ்வேறு மொழிகளில் படம் எடுப்பது முற்றிலும் புதிது. இந்தப் புதுமைக்குக் காரணமான அந்த நபர், பிர்ஸா முண்டா!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிர்ஸா முண்டாவைப் பற்றி முண்டாக்கள் பேசும் ‘முண்டாரி’ மொழியிலேயே ஒரு படத்தை இயக்கப் போவதாக ‘அறம்’ புகழ், கோபி நயினார் அறிவித்தார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளான நவம்பர் 15-ல், அவரைப் பற்றி இந்தியில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இந்த இருவருமே பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையைப் பற்றி ‘ஆரண்யேர் அதிகார்’ எனும் தலைப்பில் மேற்குவங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்துத்தான் திரைக்கதையை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த நாவல் 1977-ம் ஆண்டு வெளியாகி, 1979-ம் ஆண்டு, மகாஸ்வேதா தேவிக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. பிறகு, இந்த நாவலை நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழுக்கு ‘காட்டில் உரிமை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார் பிரபல மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE