சைஸ் ஜீரோ 21: நலம் காக்க நான்கு கொள்கைகள்..

By காமதேனு

ருஜுதா திவேகர்

இந்த உலகில் உள்ள எந்த ஒரு உயிரினமும் உணவு இல்லாமல் வாழ முடியாது. உண்ணும் உணவுதான் வாழ்நாளை தீர்மானிக்கிறது. அதுமட்டுமல்ல குரல் வளம், சரும செரிவு, புத்திக்கூர்மை, மகிழ்ச்சியுணர்வு, வலிமை எல்லாமே உணவால்தான் கட்டமைக்கப்படுகிறது என உணவின் அவசியத்தைச் சொல்கிறது சரக சம்ஹிதம் எனும் மருத்துவ நூல்.

உண்ணும் உணவு, உடலுக்கான பயிற்சி, உறவுகளைப் பேணுவதில் மன முதிர்ச்சி, உறக்கம் என்று 4 கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்தால் நலம் சேரும் என்பது எனது அனுபவம்.அதனால்தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான் இவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இனி வரும் சில அத்தியாயங்களில் இந்த நான்கு கொள்கைகள் பற்றியும் சற்றே விரிவாக பார்க்கப்போகிறோம்.

முதலில் வருவது ஊட்டச்சத்து கொள்கை. எப்போதுமே புதிதாகக் கிடைக்கும் உணவை உண்ணுங்கள். புதிதாக சமைக்கப்பட்ட உணவோ அல்லது புதிதாகப் பெறப்பட்ட காய்கறி, பழங்களோ அதனுள் ஊட்டச்சத்தை நிறைவாய் வைத்திருக்கும். ஊட்டச்சத்து ததும்பியிருந்தால் அது சீராக ஜீரணமடையும். சரியான ஜீரணம் சரியான வேளையில் கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றும். இது தொடர் நிகழ்வாக அமையும்போது உடல்நலம் சீராக இருக்கும். உடல்நலம் சீராக இருந்தால் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும். அப்புறம் என்ன... நீங்கள் விரும்பும் ஒல்லியான வடிவான தேகம் உங்களுக்கு வசப்படும். இதை படிப்பதற்கு நமக்கு எளிதாக இருக்கலாம். ஆனால், பின்பற்றுவதற்கு கொள்கை பிடிப்பு வேண்டும். இதை இயல்பான பழக்கமாக்கிக் கொள்ள சில வழிமுறைகளை உங்களுக்குச் சொல்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE