கா.சு.வேலாயுதன்
எம்.ஜே. ஸ்டெல்லாமேரி. புதுச்சேரிக்காரர். பள்ளிப் பருவத்திலேயே கவிதாயினி அவதாரம் எடுத்தவர். கணையாழி, வேட்டை, நந்தவனம் உள்ளிட்ட சிற்றிதழ்களில் மட்டுமல்ல... வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன. இதுவரை 5 நாவல்களும் படைத்திருக்கும் இவருக்கு, தமிழ் அறக்கட்டளை (சென்னை) அமைப்பு ‘கவிமுரசு’ விருதினையும், புதுச்சேரி உலகப்பாவலர் தமிழ் அன்னை என்ற அமைப்பு ‘சிந்தனைக்கவி’ என்ற பட்டத்தையும் தந்துள்ளது. இவரது ‘கற்கள் கரைகின்றன’ என்ற முதல்கவிதைத் தொகுப்பு அச்சில் உள்ளது. ஸ்டெல்லாமேரிக்குப் பிடித்த பத்து இங்கே...
ஆளுமை: இந்திராகாந்தி. நம் நாட்டின் முதல் பெண் பிரதமர் இரும்பு மங்கை என்ற பெயருக்குப் பொருத்தமான பெண். அடுத்தவர் அப்துல் கலாம். பெயர் சொன்னதுமே இளைஞர்களின் எழுச்சி கண்முன்னே வந்தாடும். என் மனதின் ஊக்கமும் அவரே!
கதை: எழுத்துலகில் ஒரு சாம்ராஜ்ஜியம் கல்கியின் ‘பொன்னியின்செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’. சுஜாதாவின் ‘சிவப்பு மாருதி’, ‘பூனைகள் இல்லா வீடு’.