அப்போது வீட்டுக்கு வீடு சாராயம்... இப்போது வீடுதோறும் சதுரங்கம்!

By காமதேனு

என்.சுவாமிநாதன்
 

திருச்சூரில் இருந்து 20 கிலோமீட்டரில் இருக்கிறது மரோட்டிசால் கிராமம். பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை வரிசைகட்டி நிறுத்தியதும், “இன்னைக்கு நான்தான் ஜெயிப்பேன்” என்று பேசியபடியே பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இறங்கி வருகிறார்கள். உள்ளூர் வாகன ஓட்டிகளும், தத்தமது வண்டிகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு ஆட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

மரோட்டிசால் கிராமத்தின் பெருமைமிகு அடையாளமே ‘செஸ் (சதுரங்க ஆட்டம்) கிராமம்’ என்பதுதானாம்! இந்திய அளவில் அதிமான செஸ் விளையாட்டு நபர்களைக் கொண்டதும், செஸ் விளையாட்டு தொடர்பான புரிதல் கொண்ட கிராமமும் இதுதான். எல்லோர் வீட்டிலும் செஸ் விளையாடுபவர்கள் இருக்கிறார்கள். நம்மூர் கிராமத்து கிட்டிப்புள், கிரிக்கெட் மாதிரி இங்கே சதுரங்க விளையாட்டு! பெரும்பாலான வீடுகளின் முற்றத்தில் சதுரங்க கட்டம் வரையப்பட்டிருக்கிறது. இங்கிருக்கிற உன்னிகிருஷ்ணன் என்பவரின் உணவகமே இப்பகுதி மக்களின் செஸ் கிளப்பாக இருக்கிறது.

மலையாளத்தில் முரளிகோபி, ரிமா கல்லிங்கல் நடிப்பில் ‘ஆகஸ்ட் கிளப்’ எனும் படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. செஸ் விளையாட்டைக் கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் பெரும்பகுதி மரோட்டிசாலில் எடுக்கப்பட்டது. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE