புத்தகம் (சு)வாசிப்பது எஸ்.எஸ்.ஆர்.லிங்கம்!

By காமதேனு

கே.கே.மகேஷ்

“தம்பி, போன வாரம் என்னோட புத்தகம் அனுப்புனேனே, வாசிச்சிட்டீங்களா?” என்று ஒருவர் ‘வாட்ஸ் - அப்’ அனுப்புவார். கிடைத்து 6 மாதமாகியிருக்கும், 12 முறை போனில் அழைத்திருப்பார். புத்தகத்தைப் படிக்கவும் முடியாமல், அவருக்குப் பதில் சொல்லவும் முடியாமல் தவியாய்த் தவிப்பேன்.

“நீ சோம்பேறியல்ல, ஜமுக்காளத்தில் வடிகட்டிய சோம்பேறி” என்று முகத்தில் அறைந்தது போல சொன்னது எஸ்.சேதுராமலிங்கம் அய்யாவுடனான சந்திப்பு. 27,500க்கும் அதிகமான புத்தகங்களை வாசித்ததோடு, அத்தனை புத்தகங்களுக்கும் அதன் கடைசி பக்கத்திலேயே விமர்சனமும் எழுதி வைத்திருக்கிறார் மனிதர்! எஸ்.எஸ்.ஆர்.லிங்கம் என்பது இலக்கிய உலகம் இவருக்குச் சூட்டிய செல்லப் பெயர்.

“புத்தகம்தான் வாழ்க்கைன்னு பல பேரு சொல்லிக் கேட்டிருப்போம். உண்மையிலேயே அப்படி வாழ்றது எஸ்.எஸ்.ஆர்.லிங்கம்தான் சார். 92 வயசுலேயும் புத்தகங்களை வாசிச்சுக்கிட்டே இருக்கார், அதுவும் கண்ணாடி போடாம! 9 பிள்ளைகள், 17 பேரப்பிள்ளைகள் இருந்தாலும் நான் புத்தகங்களோடுதான் இருப்பேன் என்று அடம்பிடித்து தனி வீட்டில் வசிக்கிறார். அலமாரிகள், பீரோ, பரண், கட்டில், அட்டைப்பெட்டிகள் என்று எங்கும், எதிலும் புத்தகங்கள். அடுப்படியில் பூனை தூங்கும் வீட்டைப் பார்த்திருப்பீர்கள், புத்தகம் உட்கார்ந்திருக்கும் வீடு அவருடையது” என்று இலக்கிய ஆர்வலரும், வழக்கறிஞருமான அன்னக்கொடி சொன்னபோது கொஞ்சம் மிகைப்படுத்துவதாகவே நினைத்தேன். வில்லிபுத்தூர் செட்டியகுடி தெருவில் உள்ள லிங்கம் ஐயா வீட்டுக்கு நேரில் சென்றபோது அனைத்தும் அக்மார்க் உண்மை என்று புரிந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE