எங்க வாழ்க்கையும் அரிச்சந்திரன் கதையாகிருச்சு- ஆதிமூலத்தின் அரிதார வாழ்க்கை!

By காமதேனு

கரு.முத்து

“ரெண்டாயிரம் மேடைகள்ல அரிச்சந்திரனா வேஷம் கட்டிய என்னோட வாழ்க்கையும் அந்த அரிச்சந்திரன் கதை மாதிரியே ஆகிருச்சு தம்பி...” தலையை நனைத்த மழையைத் துண்டால் துவட்டியபடியே ஒற்றை வரியில் தனது சோகத்தைச் சொன்னார் ஆதிமூலம்.

இரண்டொரு வெற்றிப் படங்களைத் தந்துவிட்டாலே அந்த நாயகரை, வருங்கால முதல்வரே’ எனத் தோளில் தூக்கிக் கொண்டாடுவது சினிமா நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஆனால், ஒப்பனைக்காரர்கள் இல்லாமல், கேரவன் இல்லாமல், அழுது வடியும் லாந்தர் வெளிச்சத்தில் தங்களுக்குத் தாங்களே அரிதாரம் பூசிக்கொண்டு தாங்களே பேசி, பாடி நடிக்கும் நாடகக் கலைஞர்களுக்கு அடுத்த மேடைதான் அடுத்த நாள் சோற்றுக்கான உத்தரவாதம்!

அப்படியொரு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நாடகக் கலைஞர்களில் ஒருவர்தான் ராஜபார்ட் நடிகர் எம்.கே.ஆதிமூலம். 38 ஆண்டுகளாக மேடைக்கு ராஜாவாக இருக்கும் ஆதிமூலத்தை ஒருங்கிணைந்த கடலூர் மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தெரியாத நாடகக் கலா ரசிகர்களே இருக்க முடியாது. எங்கே திருவிழா என்றாலும், “கூப்பிடு ஆதிமூலத்தை...” என்று கிளம்பிவிடுகிறார்கள். காரணம், ஆதிமூலமும் அவரது குழுவினரும் கலையை ரசித்துக் கொண்டாடும் விதம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE