அட்ரா சக்க அப்துல் காதர்!

By காமதேனு

என்.பாரதி

`கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். அப்படித்தான் தோற்றத்தில் சிறியவராகத் தெரியும் அப்துல்காதரும் தனது வீட்டின் உரிமையாளருக்காக சட்டப் போராட்டம் நடத்தி அவரது உறவுகளையே தெறிக்கவிட் டிருக்கிறார்!

நாகர்கோவிலைச் சேர்ந்த எம்.எம்.அப்துல் காதர் சர்வதேசப் பேரிடர் மேலாண்மையின் இயக்குநராக உள்ளார். ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, இந்தியாவில் தேசியப்பேரிடர் மேலாண்மைத்துறை கேட்டுக்கொள்ளும் பணிகளையும் செய்யும். இயற்கை பேரிடர் காலங்களில் தகவல்தொடர்பு பணிக்கு அப்துல்காதரும் அழைக்கப்படுவார்.

அண்மையில் நாகர்கோவில் பட்டக சாலியன்விளை பகுதியில் புதிதாக ஒரு வீட்டுக்குக் குடிபோனார் அப்துல்காதர். அந்த வீட்டின் உரிமையாளருக்கு நாகர்கோவிலை அடுத்த கேசவபுத்தன்துறை கிராமம் பூர்வீகம். வீடு ஒத்தி தொடர்பான ஒப்பந்தம் போடுவதற்கு உரிமையாளரின் வீட்டுக்குச் சென்ற அப்துல்காதர், வீட்டின் உரிமையாளர் ஜேசுகோஸ்தா இடுப்புக்குக் கீழ் செயல் இழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தார்.
ஒப்பந்தம் எழுதும் பணிகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் திடீரென ஒருநாள் ஜேசுகோஸ்தாவிடம் இருந்து அப்துல்காதருக்கு போன். அதன் பின்னர் நடந்தவைகளை அப்துல்காதரே சொல்கிறார். “வீட்டு ஒப்பந்தம் எழுதுன சமயத்துல ஜேசுகோஸ்தாவின் மனைவிதான் ஆக்டிவாக எல்லா வேலைகளையும் செஞ்சாங்க. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரைத் தானே பக்கத்தில் இருந்து கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE