மரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன்- ராஜேந்திர பாலாஜி vs ஆர்.பி.உதயகுமார்

By காமதேனு

கே.கே.மகேஷ்

எம்ஜிஆர் காலத்தில் விருதுநகர் மாவட்ட அதிமுக என்றால் கேகேஎஸ்எஸ்ஆரும் தாமரைக்கனியும் தான் என்றிருந்தது. எம்ஜிஆரின் படைத்தளபதிகளாக இருந்தபோதே, இவர்கள் இருவரும் போட்டுக்கொண்ட சண்டைகள் பிரசித்தமானவை.

ஜெயலலிதா வருகைக்குப் பிறகு கேகேஎஸ்எஸ்ஆர் வெளியேற்றப்பட்டார். நான் எம்ஜிஆர் காலத்து ஆள் என்று கெத்து காட்டியதால், தாமரைக்கனியையும் கட்டம் கட்டினார் ஜெயலலிதா. மகன் இன்பத்தமிழனைக் கொண்டே தாமரைக்கனியை ஓரங்கட்டிய ஜெயலலிதா, 36 வயதிலேயே மாவட்டச் செயலாளர், அமைச்சர் என இன்பத்தமிழனுக்குப் பொறுப்புகளைக் கொடுத்து, தந்தைக்கு எதிராக முழங்க வைத்தார். மரத்தை வெட்ட அதன் கிளையே கோடாலிக்காம்பானது. தாமரைக்கனியின் மரணத்துக்குப் பிறகு, கோடாலிக்காம்பும் தூக்கி வீசப்பட்டது.

அதன் பிறகு எத்தனையோ பேர் அதிமுகவில் மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ ஆனாலும்கூட கேகேஎஸ்எஸ்ஆர், தாமரைக்கனி அளவுக்கு மாநிலம் முழுக்க அறிந்தவர்களாக இல்லை. இந்த நிலையில்தான், 2011-ல், கே.டி.ராஜேந்திர பாலாஜி அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் வந்தார். வந்த வேகத்திலேயே கட்சியிலும், அதிகார மட்டத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அனைத்து சமுகத்தினருடனும் இணக்கமாகப் பழகுவது, ஊருக்குப் பத்துப் பேரையாவது உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவது என மாவட்டத்தில் தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியின் கோட்டைக்குள் இப்போது கல்லெறிய ஆரம்பித்திருக்கிறார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE