‘ஆத்தாடீ... இவன் யார்றா!'
கொட்டுகிற மழைக்கு, கல்யாண வீட்டுத் தென்னந்தட்டிப் பந்தல், பொத்தல் போட்டு ஒழுகிக்கொண்டிருந்தது.
கூடி நிற்கும் சனத்துக்குக் குளிர் நடுக்கியது. தின்ன சோற்றுக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றுது. உள்ளூருக்குள்ளே உறவு முறை கல்யாணத்திலே நின்னு ஆகணுமே…?
“போத்தா… போய் தாலி எடுத்துக் குடு” என அரியநாச்சியை மணப்பலகை நோக்கி அனுப்பிவிட்டு, வள்ளி அத்தையும் பூவாயி கிழவியும் தாழ்வாரத்திலேயே நின்றுகொண்டார்கள். திருப்பூட்டுகிற மணவறையில் வாழ்வரசிகள் மட்டுமே நிற்க வேண்டும் எனபது ஓர் ஐதீகம்.