கொஞ்சம்  சும்மா இருக்கலாமா?

By காமதேனு

தம்பி
readers@kamadenu.in

நம் வாழ்வில் கைபேசி பிடித்திருக்கும் இடத்தைப் பார்த்தால் மிகவும் பயமாக இருக்கிறது. “என் பெண்ணை என்ன செய்வதே என்று தெரியவில்லை. எப்போதும் கைபேசியை நோண்டிக்கொண்டே இருக்கிறாள்” என்று நண்பர் ஒருவர் என்னிடம் குறைபட்டுக்கொண்டார். அப்படிச் சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் தனது கைபேசியில் வாட்ஸ் - அப்பை பார்க்க ஆரம்பித்தார். ஆக, கைபேசி என்பது இளைய தலைமுறையினரின் பிரச்சினை மட்டுமல்ல; நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள் என்று எல்லோரின் பிரச்சினையாகவும் உருமாறிவிட்டது.

கைபேசியை இடைவிடாமல் நோண்டுவது நோயா என்ன என்று கேட்டால் உளவியல் மருத்துவர்கள் “ஆமாம்” என்றுதான் பதிலளிக்கிறார்கள். எப்போதாவது பார்த்தால் பிரச்சினை இல்லை. எப்போதும் நோண்டிக்கொண்டிருந்தால்தான் நமக்கு மனரீதியான பிரச்சினையிலிருந்து உடல்ரீதியான பிரச்சினை வரைக்கும் ஏற்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE