ஹாட் லீக்ஸ்

By காமதேனு

தூத்துக்குடி அதிமுகவில் நீயா நானா போட்டி!


தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் வைகுண்டம் எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதனுக்கும் ஏழாம் பொருத்தமாய் இருக்கிறது. கட்சிக்குள் யார் பெரியவர் என்று காட்டிக்கொள்வதில் இருவரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களையும் இரு தரப்பும் தனித் தனியாகவே நடத்தி வருகின்றன. இந்தத் தொகுதிகளில் யாருடைய ஆதரவாளர்களை நிறுத்துவது என்பதிலும் இந்நாளுக்கும் முன்னாளுக்கும் போட்டி பலமாகவே இருக்கிறது.

மக்கர் செய்யும் குக்கர் ஜாதகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE