பி.எம்.சுதிர்
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்தன. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வீட்டில் தாத்தா, பாட்டிகள் இருந்தார்கள். அம்மாக்களும் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்ததால், குழந்தைகளை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்துபோய், அம்மா, அப்பா, குழந்தை எனக் குடும்பங்கள் குறுகிவிட்டன. பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயச் சூழல். ஆனால், இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.
அம்மாவும், அப்பாவும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய நிலைக்குப் பல குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். ஒரு சிலர், காப்பகங் களில் தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்கிறார்கள். இந்த வசதிகள் இல்லாத இடங்களில் அப்பாவும் அம்மாவும் வீடு திரும்பும்வரை தனிமைக்குள் தள்ளப்படுகி றார்கள் குழந்தைகள். இதுபோன்ற சூழலில் வீட்டில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
தனிமைக்குத் தயாரா?
குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு நீங்கள் வெளியில் செல்லும்போது, தனிமையில் இருக்க குழந்தை தயாராக இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தனியாக இருக்க பயமாக இருப்பதாகக் குழந்தைகள் தெரிவித் தால், அவர்களைத் தனியே விட்டுச் செல்லும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக, பக்கத்து வீட்டிலோ, உறவினர்களின் வீட்டிலோ குழந்தையை விட்டுவிட்டுச் செல்லலாம். அல்லது அவர் களைப் பார்த்துக்கொள்வதற்காக ஒரு ஆளை நியமிக்கலாம்.