தினகரனின் ஓரங்க நாடகம் முடிந்துவிட்டது!- - அதிமுக தேர்தல் பிரச்சாரக்குழு தலைவர் வைகைச்செல்வன்

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்

தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வருமா வராதா என விவாத மேடைகள் போய்க்கொண்டே இருக்க, இடைத் தேர்தலுக்கான பிரச்சாரக் குழு தலைவராக முன்னாள் அமைச்சரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வனை அறிவித் திருக்கிறது அதிமுக. அரசுக்கு எதிராக ஏகப்பட்ட சவால்கள் வரிசைகட்டும் நிலையில் இடைத் தேர்தல் களத்தை எப்படி அணுகப்போகிறது அதிமுக 
என்பது குறித்து வைகைச்செல்வன் காமதேனு இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

இடைத் தேர்தலை அதிமுக தனித்தே சந்திக்குமா அல்லது பாஜக-வுடன் கூட்டணி ஏதும் வருமா?

கூட்டணி பற்றி தலைமைதான் முடிவு செய்யும். ஆனால், அதிமுக ஏற்கெனவே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வென்ற இயக்கம். ‘அப்பெல்லாம் அம்மா இருந்தாங்களே... இப்ப அவங்க இல்லையே’ன்னு நீங்க கேட்கலாம். இப்போது, அம்மா விட்டுச் சென்ற கொள்கைகளும் லட்சியங்களும் எங்களிடம் இருக்கின்றன. அம்மாவிடம் பயிற்சிபெற்ற தலைவர்கள் இந்த இயக்கத்தை சாணக்கியத் தனத்துடனும் சாந்தகுணத்துடனும் சரியான பாதையில் வழி நடத்துவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE